அநீதி: எளிய மனிதர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்

அநீதி: எளிய மனிதர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்

2 mins read
65b2e43a-e854-4427-b35a-56c316888125
‘அநீதி’ படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா. - படம்: ஊடகம்

தமது திரையுலகப் பயணத்தில் ‘அநீதி’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள படம் ‘அநீதி’. எதிர்வரும் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியீடு காண உள்ளது.

எளிய மனிதர்களுக்கு நீதி மறுக்கப்படுவதால் எழும் உரிமைக்குரல் குறித்து இப்படம் அலசுகிறது.

படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் மூழ்கியுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகனான அர்ஜூன் தாஸுடன் தாம் போட்டி போட்டு நடித்துள்ளதாகக் கூறுகிறார் துஷாரா.

வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் என்றும் இதுபோன்ற படைப்புகள்தான் ஒரு நடிகைக்கு ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்துத் தரும் என்றும் துஷாரா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் நாயகன் அர்ஜூன் தாஸ்.

“எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையும் எனத் தெரியவில்லை. இப்படத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

தொடர்புடைய செய்திகள்

“இயக்குநர் வசந்தபாலன் என்னை தொடர்புகொண்டு பேசியபோது, வழக்கம்போல் வில்லன் கதாபாத்திரம்தான் அமையும் என நினைத்தேன். ஆனால் அதைவிட முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்,” என்கிறார் அர்ஜூன் தாஸ்.

தமது குரல் வித்தியாசமாகவும் கணீர் என்று இருப்பதாகவும் பிறர் சொல்லும்போது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிடுபவர், தமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க குரல் மட்டுமே காரணமல்ல என்கிறார்.

“நான் எப்போதும் இயக்குநர்களிடம் சரணடைந்து விடுவேன். அவர்கள் சொல்லும்படி நடிப்பதையே விரும்புகிறேன்.

“இதுவரை நீண்ட கால திட்டங்கள் எதையும் தீட்டவில்லை. ‘லியோ’ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா, எத்தகைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் எனப் பலரும் கேட்கிறார்கள். அது ரகசியமாகவே இருக்கட்டும். படம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது குரலால் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்கிறார் அர்ஜூன் தாஸ்.

குறிப்புச் சொற்கள்