யோகி பாபு ஜோடியாக இனியா

யோகி பாபு ஜோடியாக இனியா

1 mins read
7f708658-8a75-43b1-8dae-153729c14bb5
‘தூக்குத்துரை’ படத்தில் யோகி பாபு, இனியா. - படம்: ஊடகம்

`தூக்குத்துரை’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது ஜோடியாக நடிக்க இனியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிராமத் திருவிழாக்களின்போது தற்காலிகத் திரை அமைத்து திரைப்படங்களைத் திரையிடும் தொழில் செய்பவராக யோகிபாவும் கிராமத்துப் பெண்ணாக இனியாகவும் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இனியா இரு வெவ்வேறு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மாரிமுத்து, பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர்.

“திருப்பத்தூர் தான் கதைக்களம். அங்கு குகைகள் நிறைந்துள்ள பகுதிகளில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளைத் தொடங்கி உள்ளோம். மிக விரைவில் தூக்குத்துரை ரசிகர்களை சந்திப்பார்.

“எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் இனியா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்