மலேசிய நடிகர் முகேன் ராவ் நடிக்கும் புதிய படத்தை ஜி.மணிகண்டன் தயாரிக்க, கவின்ராஜ் இயக்குகிறார்.
இவர் ஏற்கெனவே முகேன் நடித்த ‘வேலன்’ படத்தை இயக்கியவர். இருவரும் மீண்டும் இணைந்துள்ள படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை.
கதைப்படி இரண்டு நாயகிகள் உள்ளனராம். சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. குற்றச் சம்பவங்களும் திகிலும் நிறைந்த கதையில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் முகேன். ஜென் மார்ட்டின் இசை அமைக்கும் இப்படத்தில் உயர்ரக நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.
அடுத்த வாரத்தில் படப்படிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பிக்பாஸ் போட்டியில் வாகை சூடிய பின்னர் முகேன் ராவ் தமிழில் பல படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
‘வெற்றி’, ‘மதில் மேல் காதல்’, ‘காதல் என்பது சாபமா’, ‘ஜின்’ என படத் தலைப்புகளையும் அறிவித்தனர். ஆனால் அவை இன்னும் வெளியாகவில்லை.


