சரிதா: சிவாவைப் பார்த்தால் ரஜினியைப் போல் உள்ளது

சரிதா: சிவாவைப் பார்த்தால் ரஜினியைப் போல் உள்ளது

1 mins read
90f4e601-a7bb-4b6c-88e8-926271ba922c
சரிதா. - படம்: ஊடகம்

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த சரிதா, மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

அண்மையில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் சரிதாவின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக இருந்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் குடியேறிய நிலையில், நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் நல்ல கதைகள் அமையாததால் அவற்றில் நடிக்கவில்லை என்றும் கூறுகிறார் சரிதா.

“ரஜினியுடன் ‘தப்பு தாளங்கள்’, ‘நெற்றிக்கண்’, ‘சிவப்பு சூரியன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். இதனால் அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும். இப்போது சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்ப்பதுபோலவே இருக்கிறது. சிவாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் சரிதா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்