தமிழில் வெற்றிபெற்ற மாநாடு படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். அதில் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி நாயகனாக நடிக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விமர்சகர்களின் பாராட்டுகளோடு நல்ல வசூலையும் பெற்றது இப்படம்.
இதன் தெலுங்கு மறுபதிப்பு உரிமையை ராணாவின் குடும்பத்தினர் ரூ.12 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டது.
இந்தியில் சிம்பு அல்லது இந்தி நடிகர் வருண் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளிவந்த நிலையில், ராணாவே நடிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


