தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரத்: இன்னும்கூட போராடிக் கொண்டிருக்கிறேன்

1 mins read
696d4a6c-c040-439c-acff-cc85a9e89424
நடிகர் பரத். - படம்: ஊடகம்

பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள போதிலும், திரையுலகில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடி வருவதாகச் சொல்கிறார் ‘காதல்’ பரத்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது ‘லவ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது பரத்துக்கு ஐம்பதாவது படம்.

“எனது திரை வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து இருக்கிறேன். நல்ல படமாக நினைத்து நடித்தாலும் சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுவது இல்லை.

“இன்னும்கூட போராடி வருதற்கு எந்தவித சினிமா பின்புலமும் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். குறைந்த செலவில் படம் எடுப்பவர்கள் தொடர்ந்து என்னை அணுகுவார்கள் என நம்பிக்கை உள்ளது,” என்கிறார் பரத்.

அதிக சம்பளம் கேட்கமாட்டார், படம் வெளியீடு காணும்வரை தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பக்கபலமாக இருப்பார் என்று கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் பரத்தைப் பாராட்டுகிறார்கள்.

“சினிமாவில் நீடிக்க உழைப்பு மட்டும் போதுமானதல்ல. நல்ல பெயரும் அவசியம்,” என்கிறார் பரத்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்