கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதுப்படம் ‘கண்ணிவெடி’

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதுப்படம் ‘கண்ணிவெடி’

1 mins read
45e8af68-bf44-43dd-b4a5-c77dcd4d516d
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

தமிழில் அடுத்து ‘கண்ணிவெடி’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இதை ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் ஏற் படும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இப்படம் உருவாகும் என்கிறார் கீர்த்தி.

நடப்பாண்டில் இவர் நடித்து வெளியீடு கண்ட ‘தசரா’, ‘மாமன்னன்’ ஆகிய இரு படங்கள் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மூன்றாவது வெற்றிக்காகக் காத்திருப்பவர், சென்னையில் நடைபெற்ற ‘கண்ணிவெடி’ படப் பூசையில் உற்சாகத்துடன் பங்கேற்றார். இப்படத்தை கணேஷ் ராஜ் என்பவர் இயக்குகிறார்.

“நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள கீர்த்தி முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என அவரது தரப்பு தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், புதுப்படம் ஒன்றில் சிம்புக்கு ஜோடியாக நடிக்கிறார், விரைவில் இந்தியில் அறிமுகமாகிறார் என்பன போன்ற தகவல்கள் குறித்தும் கீர்த்தியே தெளிவுபடுத்துவார் என்றும் அவரது தரப்பு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்