‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

1 mins read
e17b7692-28a4-4eb8-a162-8beb8cd6393d
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம், ரீத்து வர்மா. - படம்: ஊடகம்

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம், பல்வேறு காரணங்களால் இன்னமும் வெளியீடு காணவில்லை. பலமுறை வெளியீட்டுத் தேதியை அறிவித்தனர். எனினும், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு வெளியீடு தள்ளிப்போய்விடும். இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருந்த விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ‘விரைவில் ஜான் உங்களைச் சந்திப்பார்’ என்று படக்குழு சார்பில் சுவரொட்டி வெளியாகி உள்ளது.

மேலும், அப்படத்துக்கான பின்னணி இசையை அமைத்து வருவதாக ஹாரிஸ் ஜெயராஜும் கூறியுள்ளார்.

இப்படத்தில் ரீத்து வர்மா நாயகியாகவும் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்