கஜோல்: எங்கு சென்றாலும் எங்களைத் துரத்துகிறார்கள்

1 mins read
5a3b4aed-cf21-4fbe-8b29-a5dde8c1b8e3
கஜோல். - படம்: ஊடகம்

எங்கு சென்றாலும் ஊடகவியலாளர்களும் ‘பாப்பரசி’ எனப்படும் புகைப்படக் கலைஞர் களும் தம்மைப் பின்தொடர்வது வருத்தம் அளிப்பதாக நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பொது வாழ்க்கையில் இதுபோன்ற சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தாம் உணர்ந்துள்ள போதிலும், தனிப்பட்ட தருணங்களின்போதும் இவ்வாறு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நடிகைகளுக்கும் சில அசௌகரியங்கள் இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். என் மகள் நைசா தேவ்கன் எங்கு சென்றாலும் அவரையும்கூட சிலர் விரட்டிச்சென்று படம் பிடிக்கிறார்கள்.

“அனைவருமே சமூகத்தின் ஓர் அங்கம் என்பதால் எல்லாருக்கும் ஒருவிதப் பொறுப்புணர்வு வேண்டும். இந்தத் துரத்தல்கள் கசப்பான அனுபவங் களாக மனதில் பதிந்துவிடுகின்றன,” என்கிறார் கஜோல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்