மாணவர்கள் நல்ல கல்வியின் மூலமாக வாழ்க்கையைப் படிக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா அறிவுறுத்தி உள்ளார்.
அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை மாணவர்களின் கல்விக்கு அவர் உதவி வருகிறார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தலைவணங்குவதாகக் குறிப்பிட்டார்.
“மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கடினமான செயல் என்பது தெரியும். கல்வி மூலமாக வாழ்க்கையைப் படியுங்கள். வாழ்க்கை மூலமாகக் கல்வியைப் படியுங்கள் என்பதே மாணவர்களுக்கு எனது அறிவுரை. வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை,” என்றார் சூர்யா.