‘ஜெயிலர்’ படத்தலைப்புக்கு சிக்கல்

1 mins read
da270bc2-4f78-4011-8b18-61b401cae918
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி. - படம்: ஊடகம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’. மிக விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது.

இதே தலைப்பில் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சகீர். ‘ஜெயிலர்’ என்ற தலைப்பை கடந்த 2021ஆம் ஆண்டே தாம் பதிவு செய்துவிட்டதாகவும் அதை திடீரென மாற்ற இயலாது எனவும் நெல்சன், ரஜினி தரப்புக்கு கடிதம் மூலம் அவர் தெரியப்படுத்தி உள்ளார்.

இரு படங்களுமே சிறையில் உள்ள கைதிகளை ஒரு ஜெயிலர் திருத்துவதை மையப்படுத்தி உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ரஜினி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தலைப்பை விட்டுக்கொடுக்கும்படி மலையாள இயக்குநரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்