உடல்நலனை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தமக்கு அறிவுரை கூறியதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் ரோபோ சங்கர். அதற்காக சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைக்குத் திரும்பி வருகிறார்.
மதுப்பழக்கத்தால் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் இளையர்கள் தீய பழக்கங்களுக்கு ஆட்படக்கூடாது என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரோபோ சங்கரை அண்மையில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் கமல்ஹாசன்.
“அப்போது எனது உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். உடல்நலனைப் பேணுவதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
“என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தேதியை முடிவு செய்யவில்லை என்றும் கூறினேன்.
“மேலும், அவரிடம் (கமல்) தெரிவித்த பிறகே எதையும் செய்வேன் என்று கூறினேன்,” என்று தெரிவித்துள்ளார் ரோபோ சங்கர்.

