தற்போது தனது திரைப்பயணத்தை கச்சிதமாக அமைத்துக் கொள்வதில்தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதாக நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
மேலும், ஓய்வு கிடைத்தால் அதை குடும்பத்தினருடன் மட்டுமே செலவிட விரும்புவதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐம்பது படங்களில் தாம் நடித்து முடித்திருப்பதாகவும் மிக விரைவாக இந்த எண்ணிக்கையை எட்டிப்பிடித்திருப்பது வியப்பு கலந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் ‘இன்ஸ்டகிராம்’ பதிவில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி.
“இனிவரும் காலத்தில் மேலும் அதிக படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளேன். ஐம்பது படங்களில் நடித்திருப்பது மூலம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
“என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. சினிமாவில் நடிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்,” என்கிறார் வரலட்சுமி.