‘ஜவான்’ இந்திப் படத்தில் நயன்தாரா சண்டைக் காட்சிகளிலும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இப்படத்தின் சுவரொட்டிகளை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் ‘ஜவான்’ பட நாயகனான ஷாருக்கானின் சுவரொட்டி வெளியிடப்பட்டது. அதில் மொட்டைத் தலையுடன் மிரட்டும் தோற்றத்தில் காட்சியளித்தார் ஷாருக்.
தற்போது நயன்தாரா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டி வெளியாகி உள்ளது.
அதில் கோபப் பார்வையுடன், நவீன ரக துப்பாக்கி ஒன்றை நயன்தாரா தன் கைகளில் ஏந்தி உள்ளார்.
“இதன் மூலம் அவர் அதிரடி நாயகியாக நடித்திருப்பது உறுதியாகிறது. இந்தியில் அறிமுகப் படத்திலேயே இத்தகைய கதாபாத்திரம் அமைவது பெரிய விஷயம்,” என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘ஜவான்’ படம் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியீடு காண உள்ளது.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு கடந்த திங்கள்கிழமையன்று வெளியானது.