‘விஜய் 68’ படத்துக்கான இசை உரிமை 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்க உள்ளார் யுவன் சங்கர் ராஜா.
அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
‘லியோ’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் முன்பே ‘விஜய் 68’ படத்தில் இணையும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இப்படத்துக்கு யுவன் சங்கர் இசையமைப்பதை மட்டும் வெங்கட்பிரபு ஏற்கெனவே விஜய் அனுமதியோடு உறுதி செய்துவிட்டார்.
இந்நிலையில், படத்தின் தொடக்க நிலையிலேயே ‘விஜய் 68’ இசை உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் அஜித் படங்களுக்கு இசையமைக்க முன்னுரிமை அளித்து வந்தார் யுவன். ஆனால் ‘வலிமை’ படத்தின்போது சில காரணங்களால் இருதரப்புக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார் யுவன்.

