விஷால் படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்

1 mins read
6abdd5a1-29b5-470b-a042-89044194dfec
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

விஷால் நடிக்கும் புதுப் படத்தை இயக்குநர் ஹரி இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இது விஷால் நடிக்கும் 34ஆவது படமாகும். அறிவிப்பை வெளியிட்ட கையோடு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை.

ஹரி படம் என்றாலே அடி தடியும் அதிரடியும் நிறைந்திருக்கும். விஷாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டக்கூடியவர். எனவே இருவரும் இணைந்துள்ள படம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஷால் நடிப்பில் தற்போது ‘மார்க் ஆண்டனி’ படம் உருவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்