தொடர் வெற்றிகளை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கீர்த்தி நடித்து அண்மையில் வெளியீடு கண்ட தசரா, மாமன்னன் ஆகிய படங்கள் வசூலில் அசத்தி உள்ளன. இதையடுத்து அதிக ஊதியம் கேட்கிறாராம் கீர்த்தி.
இதுவரை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர், அதை மூன்று கோடியாக உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் தற்போது ‘கண்ணிவெடி’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி.
அதேசமயம் நல்ல கதைக்களம், நாயகியை முன்னிலைப்படுத்தும் கதை என்றால் பழைய ஊதியம் தந்தாலே போதும் என்றும் இறங்கி வருகிறாராம். இத்தகைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அவசியம் தேவை என்று திரையுலகத்தினர் கீர்த்தியைப் பாராட்டுகிறார்கள்.

