மீண்டும் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டத்தொடங்கி உள்ளார் சமந்தா. அது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், தென்னிந்தியாவில் உள்ள மேலும் சில கோவில்களுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆன்மிக பயணத்தை முடித்த பிறகே அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நலமுடன் நாடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

