ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

1 mins read
7758cfd8-151c-4068-af04-705b1d17dd27
சூர்யா. - படம்: ஊடகம்

பொது இடங்களுக்குச் செல்லும்போது தனது மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் மும்பை விமான நிலையத்தில் சூர்யாவைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். மேலும் அவரை ‘அண்ணா’ என்று பாசத்துடன் அழைத்தனர்.

இதையடுத்து, சிரித்தபடியே அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அப்போது அருகில் இருந்த தன் மகனை மட்டும் படம் எடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தனது மகன் எனத் தெரிந்துவிட்டால் பொது இடங்களில் சுதந்திரமாக நடமாட இயலாது என்பதாலேயே சூர்யா இவ்வாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்