‘லியோ’ படம் ‘கைதி’ படத்தைப்போல் இருக்கும்

‘லியோ’ படம் ‘கைதி’ படத்தைப்போல் இருக்கும்

1 mins read
7a553de2-22cb-418b-be2e-b9f4557e3c5b
‘லியோ’ படப்பிப்பில் சஞ்சய் தத், விஜய், லோகேஷ். - படம்: ஊடகம்

‘லியோ’ படம் தொடர்பான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அது வழக்கமான படமாக இருக்காது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தாம் இயக்கிய ‘கைதி’ படத்தைப் போன்று ‘லியோ’ பரபரப்பாக இருக்கும் என்றார்.

“விஜய்யைப் பற்றி பேச இந்த ஒரு மேடை போதாது. நான் எல்லா நடிகர்களையும் சார் என்றுதான் அழைப்பேன். ஆனால், விஜய்யை மட்டும்தான் அண்ணா என்று அழைப்பேன்,” என்றார் லோகேஷ் கனகராஜ்.

‘இரும்புக்கை மாயாவி’ என்ற கதையை பத்து ஆண்டுகள் எழுதி செதுக்கி இருப்பதாகவும் அதை வைத்து உருவாக்குவது தனது கனவுப் படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்கள் பலர் ‘லியோ’ படம் குறித்து இடைவிடாமல் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது சிரித்தபடியே பதிலளித்தார் லோகேஷ்.

“அந்தப் படம் குறித்து, இப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது, அது உங்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாது. எனவே, பிறகு சொல்கிறேன்.

“லியோ படத்தின் முதல் பாடலை வெளியிடுவது சற்றே தாமதமாகலாம். காரணம், இது வழக்கமான படம் அல்ல. ‘கைதி’ படத்தைப் போன்று இருக்கும்,” என்றார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதை தயாரிப்பு நிறுவனம்தான் அறிவிக்க வேண்டும்,” என்றார் லோகேஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்