‘இயக்குநர்கள் என்னை காதலிக்க விடவில்லை’

1 mins read
d503887f-2c91-4ee8-ace9-c0700e155301
விஜய் ஆண்டனி - ஊடகம்

பாலாஜி கே.குமார் இயக்கியுள்ள படம், ‘கொலை’. இப்படம் இன்று திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி பேசியபோது, “கதை சொல்லும்போது, படத்தில் 2 கதாநாயகிகள் என்று இயக்குநர் கூறினார்.

“மீனாட்சி சவுத்ரி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா சிங் எனக்கு தங்கை மாதிரி. படத்தில், எனக்கு மனைவி இருக்கிறார் என்றும் அந்த கதாபாத்திரம் எப்போதும் என் மீது கோபத்தில் எரிந்து விழும் என்று கூறினார்.

“இப்படி ஒவ்வொரு படத்திலும் என்னை காதல் செய்யவிடாமல் சில இயக்குநர்கள் தடுத்துவிடுகின்றனர். நான் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இடைவெளி விட்டுள்ளேன்.

“சினிமாவில் எனது பயணத்தை முடிப்பதற்கு முன்பு, 20 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அதனால்தான் இசை அமைப்பதில் இருந்து விலகியிருக்கிறேன்.

“எனது ‘கொலை’ படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் ஆர்யா கலந்துகொண்டு என்னையும் படக்குழுவினரையும் நெகிழவைத்து விட்டார். அவருக்கு மிக்க நன்றி,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்