‘அஜித்தைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள்’

1 mins read
f81f9ef2-b1af-465f-bcd4-7754de73f05d
அஜித் - ஊடகம்

அண்மையில் 234 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து நடிகர் விஜய் பேசும்போது, “இனி நடிகர் அஜித்தைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்துங்கள்,” என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் அஜித்தை தாக்கிப் பேசுவதும் பதிலுக்கு அவர்கள் தளபதியை தாக்குவதும் வழக்கமான விஷயமாகிவிட்டது. இந்நிலையில் “இனி யாரும் அஜித்தை தாக்கிப் பேசக் கூடாது,” என்று ரசிகர்களிடம் கட்டளையிட்டிருக்கிறார் தளபதி.

இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

“சூப்பர் ஸ்டார் விஜய்தான்,” என தளபதி ரசிகர்கள் கூற, “எப்பொழுதும் ஒரே சூப்பர் ஸ்டார்தான், அது எங்கள் தலைவர் ரஜினிதான்,” என ரஜினி ரசிகர்கள் வலைத்தளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியைவிட தான் பெரிய ஆள் என்கிற பிம்பத்தை உருவாக்குமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார் என்கிற தகவல் தலைவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்