இவன் புலி அடிச்சா வலி

1 mins read
41e7493e-14df-4ece-b807-0b3c04e26344
விக்ரம், ரீத்து வர்மா - ஊடகம்

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை 2018ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து அண்மையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடலை அண்மையில் வெளியிட்டனர். இவன் புலி அடிச்சா வலி என்ற வரிகளைக் கொண்ட அந்தப் பாடல் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்