தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தாம் சற்றும் எதிர்பாராத பரிசு என்கிறார் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்.
விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிப்பதில் இளம் கதாநாயகிகள் மத்தியில் மறைமுக போட்டி நிலவுகிறது. பரசுராம் என்பவரது இயக்கத்தில் அவர் நடிக்கும் புதுப் படத்தில் மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது படம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மற்றொரு நாயகியாக திவ்யன்ஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அண்மைமில் வெளியான ‘டக்கர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் திவ்யன்ஷா.
மேலும், ‘மஜிலி’, ‘மைக்கேல்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

