ரகுமான்: ஆஸ்கர் விருது என்னை மாற்றவில்லை

ரகுமான்: ஆஸ்கர் விருது என்னை மாற்றவில்லை

1 mins read
c0d47dc8-3973-441f-83e4-5df1ba7a850f
ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்

ஆஸ்கர் விருது பெற்றதால் தமக்குள் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

எனினும் அந்த விருதைப் பெற்ற பின்னர் தனக்கு அதிக கௌரவம் கிடைத்தது என்றும் அதிகமான மக்களை தனது இசை சென்றடைந்தது என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விருது பெற்றதால் எனக்கு ஏதேனும் ஒருவகையில் நெருக்கடி ஏற்பட்டதா என்று கேட்கிறார்கள். அவ்வாறு நெருக்கடி இருந்தால் அது என்னிடம் இருந்துதான் வரவேண்டும்.

“தாளமும் இசைக்கோர்ப்பும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். பாடல் எளிமையாகவும் மக்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும்,” என்கிறார் ரகுமான்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்