தமிழகத்தில் கல்விக் கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது என்று நடிகர் சிவகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அண்மையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலர் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்க இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகிறது என்றார்.
“அந்தக் காலத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்க எனக்கு மொத்தமாகவே 850 ரூபாய்தான் செலவானது. இப்போது என் மகன் கார்த்தியின் மகனைப் பாலர் பள்ளியில் படிக்க வைக்க ரூ.2.5 லட்சம் செலவாகிறது. அங்கு எந்தப் பாடமும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் கல்விக்கட்டணம் மட்டும் அதிகம். இது அநியாயம்,” என்றார் சிவகுமார்.

