ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி உள்ளது ‘கொலை’.
இதில் புலனாய்வு அதிகாரியாக முடிந்தவரை நேர்த்தியாக நடித்திருப்பதாகச் சொல்கிறார்.
“ஒரு கொலை குறித்து விசாரிக்கும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகளும் அவளை வட்டமிடும்.
“அனைத்துக்கும் இடையே தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை அந்தப் பெண் அதிகாரி எவ்வாறு சமாளிக்கிறார், உண்மையைக் கண்டறிகிறார் என்பதுதான் கதை.
“படத்தில் இடம்பெற்றுள்ள திடீர்த் திருப்பங்கள் அதில் நடித்துள்ள என்னையே அசர வைத்துள்ளன. எனவே படம் பார்க்கும் அனுபவம் ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும்.
“தமிழில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதனால் தமிழ்ப் படங்களுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிப்பேன்,” என்கிறார் ரித்திகா சிங்.