ஒரு படத்தில் முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க யோகி பாபு சுமார் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.40 கோடி என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல், கதை நாயகனாகவும் நடிக்கிறார் யோகி பாபு. அவரது கைவசம் 13 படங்கள் இருப்பதாகத் தகவல். தினமும் குறைந்தபட்சம் இரண்டு படங்களுக்கான படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்கிறார்.
அவர் பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாவீரன் படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து யோகி பாபு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகத் தெரிகிறது.

