‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள காட்சிகளையும் அதன் இயக்குநர் கௌதம் மேனன் நீக்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சில பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக இப்படம் வெளியீடு காணவில்லை. தற்போது படம் விரைவில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆனால், அவர் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் படத்தில் இருந்து கௌதம் மேனன் நீக்கி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் பட்டியலுடன் அண்மையில் வெளியான ‘துருவ நட்சத்திரம்’ பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் இடம்பெறவில்லை. படத்தில் அவர் இல்லாத வகையில் கதையில் சில மாற்றங்களைச் செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

