துஷாரா: இதுவும் வித்தியாசமான படைப்புதான்

1 mins read
849d93cb-6bcb-47e5-81fb-3cee51d92403
துஷாரா. - படம்: ஊடகம்

‘அநீதி’ படத்தில் மீண்டும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார் துஷாரா விஜயன்.

இப்படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ‘அநீதி’ போன்ற படைப்புகள் கலைஞர்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்த கைகொடுக்கும் என்றார் துஷாரா.

“இதற்கு முன்பு ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

“இப்போது ‘அநீதி’ படத்தில் வேறொரு மாரியம்மாவாக நடித்துள்ளேன். இதுவும் மிக மாறுபட்ட கதாபாத்திரம். இந்தப் படம் மிக நல்ல படைப்பாக உருவாகி உள்ளது,” என்றார் துஷாரா.

குறிப்புச் சொற்கள்