‘தமிழ்நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் டோனி’

1 mins read
34e7eef7-9d4b-4343-a9c7-adc15ca68949
‘எல்ஜிஎம்’ படக்குழுவினர். - படம்: ஊடகம்

கிரிக்கெட் வீரர் டோனி தமிழ்நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளதாக ‘எல்ஜிஎம்’ படக்குழு தெரிவித்துள்ளது.

திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளார் டோனி. அவர் தயாரிக்கும் முதல் படம் ‘எல்ஜிஎம்’. வரும் 28ஆம் தேதி திரைகாண உள்ளது.

இந்நிலையில் இப்படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, “தமிழக மக்கள் மீது கொண்ட அன்பால்தான், தமிழில் படம் தயாரிக்க டோனி முடிவு செய்தார். அந்த அன்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,” என்று ‘எல்ஜிஎம்’ படத்தில் பணியாற்றிய அனைவரும் குறிப்பிட்டனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘எல்ஜிஎம்’. இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், இவானா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நதியாவும், யோகி பாபுவும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்