தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘லாக்கர்’

2 mins read
2679bb30-1439-48ad-b79c-5f4c5ac9db78
‘லாக்கர்’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி. - படம்: ஊடகம்

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘லாக்கர்’ திரைப்படம்.

ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் என்ற இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள். இருவரும் இணைந்து ‘லாக்கர்’ என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள்.

இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘இறுதிப் பக்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர். நாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.

வில்லனாக நடித்துள்ள நிவாஸ் ஆதித்தன் நிச்சயமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதிப்பார் என்று இயக்குநர்கள் கூறுகின்றனர். அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.

“வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சில இணையத் தொடர்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

“நாங்கள் இயக்கி உள்ள ‘லாக்கர்’ படமும் இதுவும் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்ட படம்தான். சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

“கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாள்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

“அதிக அனுபவம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி உள்ள படம் இது. ரசிகர்கள் தரமான படைப்புகளுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

“ஏனெனில் எங்களுடையது தரமான படைப்பு என்பதை உறுதியாக நம்புகிறோம்,” என இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் - யுவராஜ் கண்ணன் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்