தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததால் இந்தித் திரையுலகம் தன்னைக் கைவிட்டதாகச் சொல்கிறார் நடிகை ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பின் நடிப்பை கைவிட்டார். இந்நிலையில் அண்மை பேட்டியில், தென்னிந்திய சினிமா நிறைய, அன்பான ரசிகர்களைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தென்னிந்திய படங்களில் நடித்தபோது சில இந்திப்பட வாய்ப்புகளும் தேடி வந்தன. எனினும், பாலிவுட்டில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னைக் கைவிட்டதோடு மீண்டும் தென்னிந்தியாவுக்கே சென்றுவிடு என மறைமுகமாகக் கூறினர். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்,” என்கிறார் ஜெனிலியா.

