அடியோடு மாறிய சிம்பு

அடியோடு மாறிய சிம்பு

1 mins read
348f157d-f1eb-48af-871d-836c476d50fe
சிம்பு. - படம்: ஊடகம்

நடிகர் சிம்பு அண்மைக்காலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருவதாகச் சொல்கிறார் நடிகர் சந்தானம்.

இருவரும் பல ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் அண்மைய பேட்டியில், சிம்புவிடம் தென்படும் மாற்றங்கள் தமக்கு வியப்பு அளிப்பதாக கூறியுள்ளார் சந்தானம். “முன்பெல்லாம் நானும் சிம்புவும் சந்தித்துக்கொள்ளும்போது பல விஷயங்கள் குறித்து ஜாலியாகப் பேசுவோம். ஆனால் இப்போது ஆன்மிகம் குறித்து மட்டுமே பேசுகிறார். சிம்பு மாறிப்போவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: அவருக்கு எப்போதுமே கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் சித்தர்கள், சாமியார்களை சந்திப்பது, திருவண்ணாமலை போவது என்று அடியோடு மாறுவார் என எதிர்பார்க்கவே இல்லை,” என்று சந்தானம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்