பிரபல நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சமந்தா

பிரபல நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சமந்தா

1 mins read
df268606-35aa-46ea-95dd-4ae3e4860a9f
சமந்தா. - படம்: ஊடகம்

இந்தியாவில் தற்போது பிரபலமாக உள்ளவர்களின் பட்டியலில் நடிகை சமந்தாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.

உடல்நலப் பிரச்சினை, மண முறிவு, குறையும் தொழில் வாய்ப்புகள் என பல சிக்கல்களைச் சந்தித்து வரும் சமந்தாவுக்கு இத்தகவல் ஆறுதலாக அமைந்திருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

2023ஆம் ஆண்டின் பிரபல பெண் நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் மேற்குறிப்பிட்ட ஆய்வு நடபெற்றது. இதில் பெரும்பாலானோர் சமந்தாவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் பட்டியலில் எட்டுமுறை இடம்பிடித்துள்ளார் சமந்தா.

அவருக்கு அடுத்தபடியாக ஆலியாபட், நயன்தாரா, தீபிகா படுகோன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படமும், ‘சிட்டாடல்’ என்ற இணையத் தொடரும் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி