தமிழ் படத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் டோனி

தமிழ் படத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் டோனி

1 mins read
5dd2e764-8428-45cc-a894-ef619069e5b5
‘எல்ஜிஎம்’ பட சுவரொட்டியுடன் டோனி. - படம்: ஊடகம்

கிரிக்கெட் வீரர் டோனி தமிழில் தயாரித்துள்ள ‘எல்ஜிஎம்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள அவர், தமிழில்தான் முதல் படத்தை தயாரித்துள்ளார்.

வரும் 28ஆம் தேதி ‘எல்ஜிஎம்’ படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் டோனி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

எனினும் மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. டோனி தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்