விஜய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சாரா

விஜய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சாரா

1 mins read
c1a0a918-e5c4-42d9-8c14-a5ce7c395bd6
சாரா. - படம்: ஊடகம்

தமிழ் ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. இவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் அவரது மகளாக ‘நிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரா.

பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கத்திலேயே ‘சைவம்’ என்ற படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டார்.

கடைசியாக ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தில் இள வயது நந்தினியாக சாராவின் நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையடுத்து தமது அண்மைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார் சாரா. இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கும் புதுப் படத்தில் சாரா நாயகியாக நடிக்க உள்ளார்.

“’பொன்னியின் செல்வன்-2’ படத்தில் சாராவை தெய்வீக அழகுடன் சித்திரித்துவிட்டார் மணிரத்னம். இனி நாயகியாக நடிக்க சாரா தயங்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு நாயகியாகும் தகுதி உள்ளது. அவரை நான் 2025ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்,” என்று இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்