நடிகை தமன்னாவின் திருமணம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, தாம் நடித்து வரும் படங்கள் தொடர்பான பணிகளை வேகமாக முடித்து வருவதாகத் தகவல்.
தமன்னா நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தெலுங்கில் ‘போலோ சங்கர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கான பின்னணிக் குரல் பதிவை கடந்த சனிக்கிழமை முடித்துள்ளாராம்.
இத்தகவலை படஇயக்குநரே சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டை தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமன்னாவும் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விஜய் வர்மாவின் குடும்பத்தினர் கூறுகின்றனராம். அதை ஏற்று திருமணத்துக்குத் தயாராகி வருகிறார் தமன்னா.

