நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் யோகி பாபு நல்ல கதைகள் அமைந்தால் நாயகனாக நடிக்கிறார்.
அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘வானவன்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
சஜின் கே சுரேந்தர் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதில் காளிவெங்கட், ரமேஷ் திலக், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கடலில் ஒரு படகில் எடுக்கப்பட்ட ‘போட்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு.

