முன்னணி இயக்குநரின் மகளாக இருந்தாலும் அனைவருடனும் இயல்பாகப் பேசிப் பழகுவதை விரும்புவதாகச் சொல்கிறார் அதிதி சங்கர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி என்று எதற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் தயக்கமின்றி பங்கேற்கிறார்.
“ஒருசிலர் நான் நட்பாகப் பேசுவதைக்கூட விமர்சிக்கிறார்கள். பிழைக்கத் தெரியாதவள் என்றும் கூறுகிறார்கள்.
“சிவகார்த்திகேயன் இன்று பெரிய கதாநாயகனாக வளர்ந்துள்ளார். ஆனால், எந்தவித பந்தாவும் இல்லாமல் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தன்னால் இயன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
“நானும் அவர் வழியைப் பின்பற்றுகிறேன். திரையுலகில் எனக்குக் கிடைத்த முதல் நல்ல நண்பர் சிவகார்த்திகேயன். எனவே, அவர் வழியைப் பின்பற்றுவதில் தவறில்லை,” என்கிறார் அதிதி.