சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் பாபி தியோல்

சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் பாபி தியோல்

1 mins read
a4d22fd8-7636-4df3-96d4-80308f1db033
‘கங்குவா’ படத்தில் சூர்யா. - படம்: ஊடகம்

‘கங்குவா’ படத்தில் ஏற்றுள்ள மாறுபட்ட கதாபாத்திரத்துக்காக நாள்தோறும் பல மணி நேரத்தை ஒப்பனைக்காகச் செலவிடுகிறார் சூர்யா.

1,500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மையமாக வைத்து ‘கங்குவா’ படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சிவா.

‘கங்கு’ என்றால் நெருப்பு என்றும் நெருப்பின் மகன் என்றும் அர்த்தமாம். கதைக்குப் பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளதாக படக்குழு கூறுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

‘லியோ’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு இந்தி நடிகரான பாபி தியோல் வில்லனாக களமிறங்குகிறார்.

“சூர்யாவுக்கு இணையாக ஆளுமைமிக்க வில்லனாக மிரட்டக்கூடிய நடிகரைத் தேடினோம். பாபி தியோல் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று நம்பினோம். கதையைச் சொன்னதும் அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்” என்கிறார் ‘கங்குவா’ படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

குறிப்புச் சொற்கள்