நளினி: தூங்கக்கூட நேரமின்றி தவித்தேன்

நளினி: தூங்கக்கூட நேரமின்றி தவித்தேன்

1 mins read
eb732490-1f15-4e74-8f60-ee9b9688b440
ராமராஜனுடன் நளினி. - படம்: ஊடகம்

ராமராஜன் குணத்தில் தங்கமானவர் என்று முன்னாள் நடிகை நளினி தெரிவித்துள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தபோது ஆண்டுக்கு 24 படங்களில் நடித்ததாகவும் அச்சமயம் நன்றாகத் தூங்க வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும் என ஏங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம்வந்த ராமராஜன், முன்னணி நாயகியாக இருந்த நளினியை திருமணம் செய்து கொண்டார். எனினும் இருவரும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், ராமராஜனை தாம் இன்னமும்கூட காதலிப்பதாக நளினி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“ராமராஜன் நல்ல நடிகர். பாவம், தெரியாமல் என்னைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் மிகவும் தங்கமானவர்தான். ஏனோ எங்களுக்குள் ஒத்துப்போகவில்லை. அதனால் பிரிந்துவிட்டோம். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்,’‘ என்று நளினி கூறியுள்ளார்.

‘மனசுக்கேத்த மகராசா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் ராமராஜன், நளினி ஜோடியாக நடித்துள்ளனர்.

“நானும் ராமராஜனும் காதலிப்பதை எனது குடும்பத்தார் எதிர்த்தனர். இருவரும் காதலித்ததால் அவரது படங்களில் என்னை நடிக்கவிடாமல் தடுத்தனர். அச் சமயம் நடிகர் சுரேஷுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்காக அவர்தான் காதல் தூது சென்றார். வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியபோது ராமராஜன் முதலில் மறுத்துவிட்டார்,” என்று நளினி கூறியுள்ளார்.

அவரது பேட்டியைக் கண்டு நெகிழ்ந்துபோன ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்