நயன்தாரா தன் குழந்தையைக் கொஞ்சும் புகைப்படம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்துக்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் நடிப்பில் அடுத்து ‘ஜவான்’ இந்திப் படம் வெளியாகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு இல்லாத நாள்களில் தனது இரட்டைக் குழந்தைகளை பராமரிப்பதிலேயே அவர் நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நயன்தாரா தன் குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழும் புகைப்படத்தை அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதைக் கண்ட ரசிகர்கள் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், குழந்தைகளை அன்பாகப் பராமரிக்கும் தாய் எனப் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘இறைவன்’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா கைவசம் மேலும் இரண்டு படங்கள் உள்ளன.