கார்த்தியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் அரவிந்த்சாமி.
சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்க உள்ளார்.
முதலில் இந்தி நடிகர் ஒருவர்தான் கார்த்திக்கு வில்லனாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரேம் குமார் கூறிய கதையைக் கேட்டதும், தயக்கமின்றி நடிக்க ஒப்புக் கொண்டாராம் அரவிந்த்சாமி.
ஏற்கெனவே, தனி ஒருவன் படத்தில் அவர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், பிரேம் குமார் கூறிய கதையிலும் வில்லன் கதாபாத்திரத்துக்கு நாயகனுக்கு இணையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் அவர் கால்ஷீட் ஒதுக்கியதாகத் தகவல்.
இதற்கிடையே, இரண்டு புதுப்படங்களில் தனி நாயகனாக நடிக்கவும் அரவிந்த்சாமி ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்க்கை வரலாற்றுப் படம் எனக் கூறப்படுகிறது.


