நடனப் பயிற்சியாளர் சாண்டி மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிஃப்ட்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
சாண்டியின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல காட்சிகள் இப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இரண்டு அதிரடியான சண்டைக் காட்சி களைப் படமாக்க உள்ளனர். அந்தரத்தில் பறந்து, பல்டி அடித்து எதிரிகளைத் தாக்குவது போன்று இந்த சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சாண்டி. தாம் பயிற்சி பெறும் காணொளியை சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், சாண்டி சிலம்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் உள்ளன. அவற்றைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதற்கு சாண்டியும் நன்றி தெரிவித்துள்ளார்.

