தனுஷ் படத்தில் ராஷ்மிகா

தனுஷ் படத்தில் ராஷ்மிகா

படம்: ஊடகம்

26 Jul 2023 - 5:10 pm

1 mins read

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இந்தப் படமும் தெலுங்கில் வெளியாகிறது.

இந்நிலையில், தனுஷ் படத்தில் கிராமத்து இளம் பெண்ணாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாகவும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று தனுஷே பரிந்துரை செய்ததாகவும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்