தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரகசியத் திருமணம் உண்மைதான்

3 mins read

கோலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகைகள் மூவர் தங்களது காதல் அனுபவங்கள், திருமண ஏற்பாடுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தான் ரகசியத் திருமணம் செய்துகொண்டேன் என்றும் தன் இதயம் நரூட்டோவுக்குத் தான் சொந்தம் என்றும் கூறியுள்ளார். இந்தச் செய்தியால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஏன் ரகசியத் திருமணம் செய்யவேண்டும், அனைவரிடமும் வெளிப்படையாகக் கூறிவிட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதானே என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மும்பையில் குடியமர்ந்துள்ளார்.

தெலுங்கில் ‘புஷ்பா 2’, தமிழில் ‘ரெயின்போ’ என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இதுதவிர இந்தியில் ‘அனிமல்’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், பாலிவுட் யூடியூப் ஒளிவழி ஒன்றுக்கு நடிகர் டைகர் ஷெராப்புடன் இணைந்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நரூட்டோவை ரகசியத் திருமணம் செய்தது உண்மைதான் என சொன்னதோடு, என் இதயமே நரூட்டோவுக்குத்தான்,” எனக் கூறினார்.

நடிகை ராஷ்மிகாவின் ரகசியத் திருமணம் குறித்து கேட்டதும் அருகில் இருந்த நடிகர் டைகர் ஷெராப் அதிர்ச்சி அடைந்தார்.

உண்மையில், நரூட்டோ என்பது ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாம். அதற்கு உலகளவில் ரசிகர்கள் உள்ள நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா ஒரு இன்ஸ்டகிராம் பதிவில் நரூட்டோ பொம்மையை முத்தமிட்டபடி எனது காதலர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புதிய காதலைரை திருமணம் செய்யவுள்ளதாக நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

‘மதராசபட்டனம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன். தற்போது அருண் விஜய்யுடன் ‘மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான ஏமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனைக் காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில், தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த ஏமி ஜாக்சன் தற்போது நடிகர் எட்வெஸ்ட் விக்கை காதலித்து வருகிறார்.

அண்மையில், ராஜஸ்தான் உதய்ப்பூருக்கு தனது புதுக் காதலருடன் சென்ற ஏமி ஜாக்சன் இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றித் திரியும் படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் கலந்தவர். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் உள்ளோம். நான் நடித்துள்ள தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என் மகன் உலகைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன்,” என்று கூறியுள்ளார்.

‘18 வயசு’, ‘ரம்மி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாமனிதன்’, ‘விக்ரம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த மாமனிதன் படம் அனைத்துலக திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடித்த வேடம் ரசிகர்கள் மத்தியில் அவரைப் பற்றி பேச வைத்தது.

இந்நிலையில், தற்போது அரவிந்த் சா என்ற நகைச்சுவையாளர் ஒருவரை காயத்ரி காதலித்து வருவதாகவும் அவருடன் அடிக்கடி வெளியில் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகிக் கொண்டுள்ளது. அதோடு அரவிந்த் சாவுடன் காயத்ரி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் பரவி வருகின்றன. என்றாலும், இந்தக் காதல் செய்தி குறித்து இதுவரை காயத்ரி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா
குறிப்புச் சொற்கள்