இன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகும் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, வினோதினி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பரத்தின் 50வது திரைப்படமாக திரில்லர் கதையம்சத்துடன் வெளிவரும் ‘லவ்’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
இந்தப் படங்களுடன் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள ‘டைனோசர்ஸ்’ படமும் இன்று வெளியாகிறது.

