தனது 48வது படத்தில் நாயகன், வில்லன் என இரண்டு தோற்றங்களுடன் நடிக்க உள்ளாராம் சிம்பு.
“ஒல்லியான உடல்வாகுடன் நாயகனாகவும் உடல் பருமனான உடல்வாகுடன் வில்லனாகவும் எடை குறைத்து, அதிகப்படுத்தி நடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன். இதுவரை, தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில், புதிய படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதற்காகவே லண்டன் சென்று புது வகை சண்டை பயிற்சியைக் கற்று வந்துள்ளேன். அந்தக் காட்சிகளைப் பார்த்து தமிழ்ச் சினிமாவில் சிம்பு ‘ட்ரெண்ட் செட்டர்’ ஆகிவிட்டார் என்று அனைவரும் கூறுவர்,” என்று கூறி வருகிறார் சிம்பு.
‘உலகின் 5வது பெரிய வைரமல்ல’
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் ‘ஜெயிலர்’ படத்தை முடித்துள்ள அவர், தெலுங்கில் ‘போலா சங்கர்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மிகப் பெரிய மோதிரத்துடன் அவர் காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. இது உலகின் 5வது பெரிய வைரம் என்றும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா, தமன்னாவுக்கு பரிசாகக் கொடுத்தது என்றும் அதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை தமன்னா, வைர வதந்திக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். “ஒரு புகைப்படக் காட்சிக்காக அணிந்தது அது. வெறும் பாட்டில் திறப்பான்தான் அது, வைரமல்ல,” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்
தெலுங்கு சினிமாவில் மூன்று கோடி சம்பளம் வாங்கி வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் 1.5 கோடி ரூபாய்தான் பெற்று வந்தார். ஆனால், தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அது வெற்றிப் படமாக அமைந்திருப்பதால், தற்போது, தமிழில் படக்கூலியை மூன்று கோடியாகவும் தெலுங்கில் நான்கு கோடி ரூபாயாகவும் உயர்த்தியுள்ளார்.
வில்லன்களுக்கு முக்கியத்துவம்
தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தளவில் முன்னேற வேண்டும் என்பதற்காக தன் படங்களில் பாலிவுட் வில்லன்களை இணைப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ‘கமலின் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் என்பவரை இணைத்து இருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
‘அது மட்டுமன்றி விஜய்யின் சர்க்கார் மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த, மாற்று மொழி வில்லன்களையும் இப்படத்தில் இணைத்து, என்னையும் முதல் தர, ‘ஹீரோ’ ஆக எடுத்து செல்லும் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறேன்,” என்கிறார்.
மூன்று நாயகிகள்
ஜெயம் ரவி நடிக்கும் சீனி என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி என மூன்று நடிகையர் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

