சாக்‌ஷி டோனி: அடிதடி நாயகனாக களமிறங்குவார் டோனி

சாக்‌ஷி டோனி: அடிதடி நாயகனாக களமிறங்குவார் டோனி

2 mins read
0f2f0a91-98cf-45cf-80c6-43c106e76331
எல்ஜிஎம் திரைப்படக் காட்சி. - படம்: ஊடகம்

“சிறப்பான கதை அமைந்தால் அதில் டோனி கதாநாயகனாக நடிப்பார். அவர் கேமராவைப் பார்த்து வெட்கப்படுபவர் அல்லர்,” என்று பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்‌ஷி டோனி கூறியுள்ளார்.

2007ல் இருந்து நிறைய விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், எப்படி நடிக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளும் வேளையில் அதிரடிக் கதைகளைத் தேர்வு செய்து நாயகனாக நடிக்கவைப்பேன்,” என்று கூறியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர்ஜே விஜய் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘எல்ஜிஎம்’. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண் படம் குறித்து கூறுகையில், “நாம் ஒருவரை ரசிப்போம். ஒருவரை பிடிக்கும். ஒருவருக்கு ரசிகராக இருந்திருப்போம். ஆனால். டோனி என்றால் ஒரு ஆளுமை மட்டுமல்ல. உணர்வு. குறிப்பாக தமிழக மக்களுக்கு டோனி மீது அளவு கடந்த பிரியம்.‌ அதைவிட தமிழக மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். குடும்பத்தின் மீதும்.. நண்பர்கள் மீதும்.. உணர்வுபூர்வமாக பின்னிப் பிணைந்து இருப்பார்கள். டோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த ஜாக்பாட். நதியா, இவானா, ஆர்ஜே விஜய், யோகி பாபு என அனைவருடனும் பணிபுரிந்தது மறக்க இயலாத அனுபவம்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்